சென்னை
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலையின் 269ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மரியாதை
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று.
அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை. அவர் வீரமும் புகழும் வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.