கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்!!

சென்னை:
கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாம அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது.

கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தண்ணீர் அதிகம் பருகுங்கள். சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.

அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.

மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *