உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!!

உதகை;
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.


நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவது சரியானது அல்ல என ஆளுங்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.

உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.

மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *