மும்பை
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கருத்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலில் மும்பை அணிக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மும்பை வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இன்றைய நாள் எங்களுக்கான நாள் கிடையாது. 190 -200 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான்.
நாங்கள் சில விஷயங்களை கொஞ்சம் மாற்றி செய்திருக்க வேண்டும். நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம். நானும் துருவ்வும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம்.
எனவே தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடிவு எடுத்து இருக்கின்றோம்.
இந்த சீசனில் பல போட்டிகளில் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம்.
என்று ரியான் பராக் கூறினார்.