சென்னை:
ஐபிஎல் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை – குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய குஜராத் வீரர் முகமது சிராஜ்க்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோதிரத்தை அணிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அப்போது, சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, “சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார்.
இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.