100-வது போட்டி: அஸ்வின் மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும்போது, இரண்டு பக்கமும் வரிசையாக நின்ற சக வீரர்கள்!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கியது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

இதனையொட்டி அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்திரு ந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு 100-வது போட்டியில் விளையாடு வதை யொட்டி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100 என எழுத்தப்பட்ட இந்திய அணிக்கான தொப்பியை வழங்கினார்.

பின்னர் அஸ்வின் மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும்போது, இரண்டு பக்கமும் வரிசையாக நின்று சக வீரர்கள் கவுரவித்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு 37 வயதாகிறது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி இலங்கை அணிக்கெதிராக முதன்முறையாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டி20 அணியில் ஜூன் 12-ந்தேதி ஜிம்பாப்வே அணிக்கெதிராக களம் இறங்கினார்.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 156 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 35 முறை ஐந்து விக்கெட்டுகளும், 8 முறை 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதியும், டி20-யில் 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதியும் கடைசியாக விளையாடியுள்ளார்.

10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். அதிவேகமாக 350 (66 போட்டிகள்) விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *