சென்னை:
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரிக்கிறார். எஸ்.என். அருணகிரி இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.