முன்னணி நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி….

சென்னை;

திடீர் மாரடைப்புக் காரணமாக நடிகர் சேஷூ (60) சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.

சின்னத்திரையில் ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சேஷூ. படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சந்தானத்துடன் இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் இவரது நகைச்சுவை கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

உடல்நலகுறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த நடிகர் சேஷூ சிகிச்சை பலனின்றி காலமானார். நாளை காலை அவரது  இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சேஷூ. நடிகர் சேஷூ விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இவரது மரணம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *