சீனா;
ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு சீனா வருத்தம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீனா தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு “பிராந்திய பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அனைத்து தொடர்புடைய பகுதிகளிலும் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பைப் பராமரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு தற்போது சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த விசயத்தில் சீனா விலகியிருக்வே விரும்பும்.