நாடாளுமன்றங்களின் குழுத் தலைவராய் கனிமொழி தேர்வானதற்கு வைரமுத்து வாழ்த்து!!

நாடாளுமன்றங்களின் குழுத் தலைவராய் கனிமொழி தேர்வானதற்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

ஒரு பெரும் பெருமை
வாய்த்திருக்கிறது
கனிமொழி கருணாநிதிக்கு

நாடாளுமன்றங்களின்
குழுத் தலைவராய்
தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது

கலைஞர் திருமகள்
கவிஞர்
முதலமைச்சரின் தங்கை
பகுத்தறிவாளர் என்ற
பிறவிப் பெருமைகளைத் தாண்டி
மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான்
இந்திய அரசியல் இதைக்
கணக்கிட்டுக் களிக்கும்

கனிமொழியின்
பதின் பருவத்தில்
கலைஞர்தான் எனக்கு
அறிமுகம் செய்தார்

காற்றோடு உரையாடும்
பூவைப்போன்ற மென்மையும்
கல்லுறுதி போன்ற
சொல்லுறுதியும்
சிங்கத்தின் இருதயமும்
கனிமொழியின் தீராத குணங்கள்

கனிமொழியை
அமைச்சராக்கவில்லையா
என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன்

‘காலம் வரட்டும்’ என்றார்

இப்போது ஒருகாலம்
அருகில் வந்து
நழுவியிருக்கிறது

ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் ‘கை’சேரலாம்

கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன்

என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *