‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு

சென்னை:
பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், ‘பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுவது உறுதியாகி இருக்கிறது.

இதற்காக முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மனப்பூர்வமாக பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது’ என கூறியுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *