திருச்சியில் ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!

திருச்சி:
திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சுமார் 6 கி.மீ தொலை​வுக்கு ‘ரோடு ஷோ’ நடத்​தி​னார்.

அப்​போது சாலை​யின் இரு​புற​மும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் திரண்டு முதல்​வருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

மேலும், புத்​தூர் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்​தார்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் பயண​மாக நேற்று திருச்சி வந்​தார். பின்​னர், துவாக்​குடி அரசு மாதிரி பள்​ளி கட்​டிடத்தை திறந்து வைத்த முதல்​வர், டிவிஎஸ் டோல்​கேட் பகு​தி​யில் உள்ள விருந்​தினர் மாளி​கை​யில் ஓய்வு எடுத்​தார்.

பின்​னர், மாலை 5.30 மணி​யள​வில் அரசு விருந்​தினர் மாளி​கையி​லிருந்து புறப்​பட்​டார். டிவிஎஸ் டோல்​கேட் சந்​திப்​பிலிருந்து குட்​ஷெட் மேம்​பாலம் வரை அரை கி.மீ தொலை​வுக்கு நடந்து சென்​றார்.

அப்​போது, சாலை​யின் இரு​புற​மும் திரண்​டிருந்த மக்​கள் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், அங்​கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்​சல் அலு​வல​கத்​தில் இறங்​கி​னார்.

சிவாஜி சிலை திறப்பு: அங்​கிருந்து நீதி​மன்​றம் அருகே உள்ள எம்​ஜிஆர் சிலை வரை சுமார் ஒன்​றரை கி.மீ தொலை​வுக்கு நடந்து சென்​றார்.

மீண்​டும் காரில் ஏறிய அவர், புத்​தூர் அரசு மருத்​து​வ​மனை அருகே இறங்​கி, அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்​து, மலர் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

நிகழ்ச்​சி​யில், நடிகர் பிரபு, அவரது சகோ​தரர் ராம்​கு​மார், பிரபு​வின் மகன் நடிகர் விக்​ரம் பிரபு உள்​ளிட்ட சிவாஜி​யின் குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அதன்​பின், அங்​கிருந்து காரில் புறப்​பட்ட முதல்​வர் தென்​னூர் காவேரி மருத்​து​வ​மனை முன்பு இறங்​கி, தில்லை நகர் வழி​யாக கே.டி. சிக்​னல் வரை சுமார் ஒன்​றரை கி.மீ தொலை​வுக்கு நடந்து சென்​றார். அப்​போது, ஆயிரக்​கணக்​கான மக்​கள் சாலை​யின் இரு​ புறமும் திரண்டு நின்று முதல்​வருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

ஏராள​மான மக்​கள் முதல்​வரிடம் மனு அளித்​தனர். மேலும் பலர் முதல்​வர் ஸ்டா​லினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்​தனர்.

வழிநெடு​கிலும் 25-க்​கும் அதி​க​மான இடங்​களில் மேடைகள் அமைக்​கப்​பட்டு பரத​நாட்​டி​யம், கரகாட்​டம், ஒயி​லாட்​டம், மயி​லாட்​டம் என பல்​வேறு கலைநிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. அதன்​பின், கரூர் பைபாஸ் சாலை கலைஞர் அறி​வால​யத்​தில் நடை​பெற்ற கட்சி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் முதல்​வர் பங்​கேற்​றார்.

தொடர்ந்​து, இன்று பஞ்​சப்​பூரில் ரூ.236 கோடி மதிப்​பில் பெரி​யார் ஒருங்​கிணைந்த காய்​கறி அங்​காடிக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். அதைத்​தொடர்ந்​து, ரூ.129 கோடி செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனை​யத்தை திறந்து வைத்​து, அதன் முகப்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள அண்ணா சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.

அதன் பின்​னர், பஞ்​சப்​பூர் ஒருங்​கிணைந்த பேருந்து முனைய வளாகத்​தை​யும், அங்கு அமைக்​கப்​பட்​டுள்ள மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.

தொடர்ந்​து, அங்கு நடை​பெறும்​ அரசு விழா​வில்​ 50 ஆயிரம் பேருக்​கு நலத்​திட்​ட உதவி​களை வழங்​கி​ பேசுகிறார்​. நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் திருச்சி சிவா, அருண் நேரு, மேயர் அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா, எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *