திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.
இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
இன்று 2-வது நாளாக கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கு வதும், சில நேரங்களில் வெளியே வருவதுமாக இருந்து வருகிறது. ஆனாலும் வழக்கமாக பக்தர்கள் நீராடும் இடத்தில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கும் இடையே உள்ள பகுதியில் சுமார் 60-ல் இருந்து 70 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
கோவிலுக்கு வந்த இளைஞர்கள், பக்தர்கள் அந்தப் பாறையின் மீது நின்று விளையாடுவதும், செல்பி எடுத்து மகிழ்வதுமாக உள்ளனர்.