இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
அதன்படி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம், குவஹாத்தியில் உள்ள ஏசிஏ ஸ்டேடியம், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியம் ஆகியவை ஆகும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணியின் தகுதிச் சுற்று நிலையைப் பொறுத்து, முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும்.
2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.