“ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் – முதல்வர் மு. க.ஸ்டாலின்!!

சென்னை:
“விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்.

மண்டல் ஆணையப் பரிந்துரைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தியும், மதவாத சக்திகளுக்கு எதிரான வலுவான அரணாக இருந்தும் சமூகநீதிக் கருத்தாடலில் தேசிய அளவில் புதுப்பாதை வகுத்தவர். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *