எனது கணவர் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் – முத்துலட்சுமி வீரப்பன்!!

சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், வீரப்பனின் மனைவியுமான முத்துலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

எனது கணவர் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். இதற்காக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளேன்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குறைந்த சம்பளத்திற்கு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

திரைப்படங்களில் நடிகைகளுடன் டூயட் பாடிவிட்டு பின்னர் அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். இதுபோன்ற நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பா.ஜ.க. பல்வேறு மாநிலங்களில் சிறு சிறு கட்சிகளை அழித்து அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டது போல தமிழகத்திலும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது.

அந்த கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்காது என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *