கோயில் பணி​யாளர்​களுக்கு துறை நிலை ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க அனு​மதி அளித்து அரசாணை வெளியீடு!!

சென்னை:
கோயில் பணி​யாளர்​களுக்கு துறை நிலை ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க அனு​மதி அளித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை விவரம்: கோயி​லில் பணிபுரிந்து ஓய்வு பெற்​றவர்​களுக்கு வழங்​கப்​படும் துறை நிலை ஓய்​வூ​தி​யம் ரூ.4 ஆயிரத்​தில் இருந்து ரூ.5 ஆயிர​மாக​வும், துறை நிலை குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரத்​தில் இருந்​து, ரூ.2,500 ஆகவும் உயர்த்தி வழங்​கப்​படும் என 2025-26 சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

இந்த அறி​விப்பை செயல்​படுத்​தும் வித​மாக, ஓய்வு பெற்ற கோயில் பணி​யாளர்​களுக்​கான துறை நிலை மாத ஓய்​வூ​தி​யத்தை ரூ.4 ஆயிரத்​தில் இருந்து ரூ.5 ஆயிர​மாக உயர்த்தி வழங்க அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

இதே​போல, ஓய்வு பெற்ற கோயில் பணி​யாளர்​களின் மறைவுக்கு பிறகு, அவர்​களது நேரடி வாரிசுகளுக்கு வழங்​கப்​படும் குடும்ப ஓய்​வூ​தி​யத்தை ரூ.2 ஆயிரத்​தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க அனு​மதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *