சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளதாவது:-
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எடப்பாடியின் எழுச்சிவெற்றி பயணம் இமாலய வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உடைந்து போய் இன்றைக்கு ஸ்டாலின் வாய்க்கு வந்ததை எல்லாம் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்.
எடப்பாடிக்கு மக்களின் வரவேற்பை பார்த்து புரிந்து கொள்ள முடியாத ஸ்டாலின் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போல கத்துகிறார் என்று வயிற்று எரிச்சலுடன், கேலி கிண்டலுமாக, நையாண்டியும் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை போல் 2026 சட்டமன்ற தேர்தலில் தீர்ப்பு உங்களுக்கு உரிய பதிலடியை மக்கள் தருவார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் சாமானிய தொண்டராக, கிளை கழக செயலாளர் முதலமைச்சர், பொதுச் செயலாளர் வரை தன் விசுவாச உழைப்பால் 52 ஆண்டு காலத்திற்கு மேலே உழைத்து உயர்ந்த உத்தமரை குறைத்து மதிப்பீட்டவர்கள் எல்லாம் அவரிடம் தோற்றுப்போன வரலாறு தான் இந்த நாடு கண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் இன்னும் எட்டு மாதங்கள் தான், திமுகவின் தில்லுமுல்லு பிரச்சாரத்திற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது.
ஆகவே கழக கண்மணிகளே 27 வது வாரமாக நடைபெறும் திண்ணை பிரச்சாரத்தில் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக களத்திற்கு செல்வோம் வெற்றி வாகை சூடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.