செல்வராகவனின் கதாப்பாத்திர சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு!!

சென்னை:
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் அடுத்ததாக ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

படத்தின் இசையை சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தில் செல்வராகவன் `பொற்தாமரை’ பைரவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *