நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் அருவி​களில் குளிக்​க​வும், காவிரி​யில் பரிசல் இயக்​க​வும் தடை!!

தரு​மபுரி / மேட்​டூர்:
நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் அருவி​களில் குளிக்​க​வும், காவிரி​யில் பரிசல் இயக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்​பும் விநாடிக்கு 22,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த மழை காரண​மாக, கர்​நாடக அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. அங்​குள்ள அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் திறக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் காவிரி ஆற்​றில் நீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்​தது.

தொடர்ந்து நீர்​வரத்து அதி​கரித்து வரு​வ​தால் சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்பு கருதி ஒகேனக்​கல் அருவி​களில் குளிப்​ப​தற்​கும், காவிரி​யில் பரிசல் இயக்​க​வும் மாவட்ட நிர்​வாகம் தடை விதித்​துள்​ளது. இதனால் விடு​முறை நாளான நேற்று ஒகேனக்​கல் வந்த சுற்​றுலாப் பயணி​கள் ஏமாற்​றமடைந்​தனர்.

சேலம் மாவட்​டம் மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 9,828 கன அடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 16,493 கன அடி​யாக​வும், மாலை​யில் 29,360 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

அணையி​லிருந்து நீர்​மின் நிலை​யம் வழி​யாக காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியி​லிருந்து நேற்று மதி​யம் 20,000 கனஅடி​யாக​வும், இரவு 22,500 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டது.

கிழக்​கு, மேற்கு கால்​வாய் பாசனத்​துக்கு 800 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணை நீர்​மட்​டம் நேற்று 118.86 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.66 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *