இந்த வார விசேஷங்கள்!!

இந்த வார விசேஷங்கள் (9-9-2025 முதல் 15-9-2025 வரை)

9-ந் தேதி (செவ்வாய்)

  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
  • திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
  • மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (புதன்)

  • சங்கடஹர சதுர்த்தி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
  • சமநோக்கு நாள்.

11-ந் தேதி (வியாழன்)

  • சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வெள்ளி)

  • பரணி மகாளயம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
  • திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
  • கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (சனி)

  • கார்த்திகை விரதம்.
  • திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
  • கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (ஞாயிறு)

  • முகூர்த்த நாள்.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
  • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் பால் அபிஷேகம்.
  • மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (திங்கள்)

  • மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி விழா தொடக்கம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • சமநோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *