தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்​தின் மொழி, இன உணர்​வு​களை அணை​யாமல் பார்த்​துக் கொள்​கிறார் ஆளுநர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்….

தருமபுரி:
தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்​தின் மொழி, இன உணர்​வு​களை அணை​யாமல் பார்த்​துக் கொள்​கிறார் ஆளுநர் ஆர்​.என்​.ரவி என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

தரு​மபுரி அடுத்த தடங்​கம் ஊராட்​சி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், ரூ.363 கோடி​யில் முடிவுற்ற 1,073 திட்​டங்​களை திறந்​து​வைத்த முதல்​வர் ஸ்டா​லின், ரூ.513 கோடி​யில் 1,044 பணி​களுக்கு அடிக்​கல் நாட்டி வைத்​தார். மேலும், 70,427 பயனாளி​களுக்கு ரூ.830 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: ஒகேனக்​கல் கூட்​டுக் குடிநீர் திட்​டம் உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களை தரு​மபுரிக்கு தந்​தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.447 கோடி​யில் 43.86 லட்​சம் பயனாளி​களுக்கு நலத் திட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இவ்​வாறு மக்​களின் நலனுக்​காக பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் திமுக அரசு குறித்து சிலர் வதந்தி பரப்பி வரு​கின்​றனர். திமுக தேர்​தல் வாக்​குறு​திபடி ஆட்​சிப் பொறுப்​பேற்ற முதல் நாளி​லேயே விடியல் பயணம் திட்​டத்​துக்கு கையெழுத்​திட்​டேன். தற்​போது கர்​நாட​கா, ஆந்​திர மாநிலங்​களி​லும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்தி வரு​கின்​றனர்.

வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு முன்​னோடி​யாக​வும், இந்​தி​யா​வுக்கே திசை​காட்​டி​யாக​வும் திரா​விட மாடல் அரசு உள்​ளது. இதை பொறுக்க முடி​யாமல்​தான் ஆட்​சிக்கு எதி​ராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்​றனர்.

எதிர்க்​கட்​சிகளை​விட மலி​வான அரசி​யல் செய்​கிறார் ஆளுநர் ரவி. திமுக ஆட்சி மீது அவதூறு பரப்​புவது, திரா​விடத்தை பழிப்​பது, சட்​டங்​களுக்கு ஒப்​புதல் தர மறுப்​பது, தமிழ்த்​தாய் வாழ்த்தை அவம​திப்​பது, தமிழக மாணவர்​களை இழி​வுபடுத்​து​வது, கல்​வி, சட்​டம்​-ஒழுங்​கு, பெண்​கள் பாது​காப்பு குறித்​தெல்​லாம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைக் கூறி பீதியை கிளப்​பும் செயல்​களில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கிறார்.

தலைசிறந்த மாநிலம்… ஆனால், இந்​தி​யா​விலேயே தமிழகம் தலைசிறந்த மாநில​மாக உள்​ள​தாக மத்​திய அரசின் புள்​ளி ​விவரங்​கள் குறிப்​பிடு​கின்​றன. பள்​ளிக் கல்​வி​யில் நாட்​டிலேயே தமிழகம் 2-வது இடத்தை பிடித்​துள்​ளது.

கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.10 லட்​சம் கோடி முதலீடு​களை ஈர்த்​துள்​ளோம். தேசிய குற்ற ஆவணக் காப்​பகத்​தின் அறிக்​கைபடி, பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்​தில்​தான் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கம் நடக்​கின்​றன.

ஆளுநர் மூலம் மத்​திய பாஜக அரசு இழி​வான அரசி​யல் செய்து வரு​கிறது. எனினும், ஆளுநர் ரவி தமிழகத்​தில்​தான் இருக்க வேண்​டும் என்​பது என் விருப்​பம்.

அவரால்​தான் தமிழகத்​தில் மொழி, இன உணர்வு மற்​றும் திரா​விட இயக்​கக் கொள்கை உணர்வு பட்​டுப் போகாமல் உள்​ளது. இந்த கொள்கை நெருப்பை அணை​ய​விட​மால் பார்த்​துக் கொள்​ளும் வேலையை ஆளுநர் ரவி சிறப்​பாக செய்து வரு​கிறார்.

எனவே, அடுத்​தும் திமுக ஆட்​சி​தான் அமை​யும். நாட்​டிலேயே அனைத்​துத் துறை​யிலும் வளர்ந்த மாநில​மாக தமிழகத்தை உயர்த்​து​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், பெரியகருப்​பன், எ.வ.வேலு, ராஜேந்​திரன் மற்​றும் எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள், அரசு உயர​தி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இணைய வழி​யில் பயிர்க்கடன்: முன்​ன​தாக, அதி​ய​மான்​கோட்டை தொடக்க வேளாண்மை கூட்​டுறவு கடன் சங்க வளாகத்​தில் நடந்த விழா​வில், இணைய வழி​யில் பயிர்க் கடன் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார். அவர் பேசும்​போது, “இது நாட்​டிலேயே முன்​னோடித் திட்​ட​மாகும்.

இனி வீட்​டில் இருந்​த​படியே ஆன்​லைன் மூலம் பயிர்க்​கட​னுக்கு விண்​ணப்​பித்​து, அன்றே வங்​கிக் கணக்​கில் கடன்​தொகை​யைப் பெற்று விவ​சா​யிகள் பயனடைய​லாம்” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *