19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி!!

ஷார்ஜா:
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் – நேபாளம் அணி​கள் இடையி​லான முதல் டி20 கிரிக்​கெட் போட்டி ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது.

இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 148 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ரோஹித் பவுடல் 38, குஷால் மல்லா 30, குல்​ஷன் ஜா 22, திபேந்​திரா சிங் அய்ரீ 17 ரன்​கள் சேர்த் தனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ஜேசன் ஹோல்​டர் 4, நவீன் பிடாசி 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

149 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யால் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 129 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. அதி​கபட்ச​மாக நவீன் பிடாசி 22, ஃபேபியன் ஆலன் 19, அமிர் ஜாங்கோ 19, கேப்​டன் அகீல் ஹோசைன் 18, அக்​கீம் அகஸ்டே 15 ரன்​கள் சேர்த்​தனர். நேபாளம் அணி தரப்​பில் குஷால்புர்​தெல் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார்.

19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் ஐசிசி முழுநேர உறுப்​பினர் அணிக்கு எதி​ராக நேபாளம் அணி வெற்றி பெறு​வது இதுவே முதன்​முறை​யாகும்.

கடந்த 2014-ம் ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ராக நேபாளம் வெற்றி பெற்​றிருந்​தது. ஆனால் அப்​போது ஆப்​கானிஸ்​தான் ஐசிசி-​யின் முழுநேர உறுப்​பினர் நா​டாக இல்​லாமல்​ இருந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *