தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவிலும் ஒன்றாகும்.
தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் வெங்கல கருடனுக்கு புஷ்ப அங்கி சேவை புரட்டாசி மாத பிறப்பான நடைபெற்றது.
3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெண்கலத்தால் ஆன நூற்றாண்டு பழமை வாய்ந்த வாகனத்தில் வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பல்வேறு வாசனை மலர்கள் அணிவித்து புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் கருட பகவானுக்கு செங்கோல் மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று எடுத்து வந்து மீண்டும் கருட பகவானுக்கு செங்கோல் வழங்கி தீபாராதனை நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இத்தகைய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.