சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்ததால் 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை !!

சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்ததால் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

100 கன அடி உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருவதால் யாரும் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகவும், அதன் நீரின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர்.

மேலும், தற்போது அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு நேற்று மாலை மதகுகளின் வழியே 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கனமழை எச்சரிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று உரு​வானது.

அது நேற்றே ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக வலுப்​பெற்று மேற்​கு – வடமேற்கு திசை​யில் நகர்ந்தது.

இன்று தென்​மேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில், வடதமிழக – புதுவை – தெற்கு ஆந்​திர கடலாரப் பகு​தி​களுக்கு அப்​பால் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்​தில் மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்து மேலும் வலு​வடையக் கூடும்.

இன்று விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, கடலூர், மயி​லாடு​துறை மாவட்​டங்​கள் மற்​றும் புது​வை​யில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதி கனமழை​யும், சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணாமலை, கள்ளக்குறிச்​சி, அரியலூர், பெரம்​பலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், திருச்​சி, வேலூர், திருப்​பத்​தூர், தரு​மபுரி மற்​றும் புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில்​ கனமழை​யும்​ பெய்​ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *