சென்னை:
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-
- அ.தி.மு.க.வை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
- பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன். அதனால்தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
- அ.தி.மு.க. தொண்டர்களால் செங்கோட்டையன் பூஜ்ஜியம் ஆக்கப்படுவார்.
- முதலமைச்சர் ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார். தி.மு.க.வின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
- தி.மு.க.வின் அஜண்டாவை செயல்படுத்த அவர்களின் B டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பமாட்டார்கள் என்றார்.