முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின் கீழ் நவ.3 முதல் 6-ம் தேதிவரை​, முதி​யோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களின் இல்லங்​களுக்குச் சென்று ரேஷன் பொருட்​களை விநி​யோகிக்க உத்தரவு!!

சென்னை: ​

முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின் கீழ் நவ.3 முதல் 6-ம் தேதிவரை​, முதி​யோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களின் இல்லங்​களுக்குச் சென்று ரேஷன் பொருட்​களை விநி​யோகிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல கூட்​டுறவு சங்​கங்​களின் கூடு​தல் பதி​வாளர் சா.​பாபு நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின் கீழ் 65 வயதுக்கு மேற்​பட்ட முதி​யோர் மற்​றும் மாற்று திற​னாளி​களின் இல்​லங்​களுக்கு நேரடி​யாகச் சென்று பொது விநி​யோகத் திட்ட பொருட்​கள் விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், நவ. 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்​னை​யில் அண்​ணாநகர், ஆலந்​தூர், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர், தேனாம்​பேட்​டை, அடை​யாறு, திரு​வொற்​றியூர், மணலி, மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு.​வி.க.நகர், அம்​பத்​தூர், கோடம்​பாக்​கம் மற்​றும் வளசர​வாக்​கம் ஆகிய 15 மண்​டலங்​களில், கூட்​டுறவுத் துறை​யின் கீழ் செயல்​பட்டு வரும் 990 ரேஷன் கடைகளின் விற்​பனை​யாளர்​கள், அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை வீடு தேடி சென்று விநி​யோகிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளி​லும் பொது​மக்​கள் அறிந்​து​கொள்​ளும் வகை​யில், தகவல் பலகை​யில் எழு​திவைக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *