தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது – மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் !!

கோவை,
கோவை முதலிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில்,மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்கள் பெண்களை முன்னிறுத்திய உள்ளன.

பிரதமர் அறிவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள்.

பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என அவரது திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். பேரவையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸ், அதற்கு திமுக ஒத்துழைத்தது. ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரம் என அதை திரும்பக்கொண்டு வர நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பிஎம் ஸ்ரீ திட்டம் தேவை என கேரளா கேட்கிறது.

இங்கு கல்வி என்றாலே எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துகிறது. நீட் மூலமாக ஏழைகள் படிக்கிறார்கள். அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்ததும் நீட்டை தூக்கி எறிவோம் என்றார்கள். கிராமப்புற மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுகிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் செய்யும் திராவிடக்கட்சி திமுக. மத்திய அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதால் அதன் திட்டங்களை எதிர்க்கின்றனர்.

மாநில அரசு கட்டும் வரியை எப்படி அந்த மாநிலத்திற்கே முழுமையாக திருப்பி தர முடியும்? வன்மத்தோடு நடக்கும் ஆட்சியை கேள்வி கேட்போம். இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, கேள்வி கேட்கும் திறமையை வளர்க்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து கோவை முதலிபாளையத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தீபாவளிக்கு பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கு பலன் தந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எஸ்.ஐ.ஆர் செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. இறந்தவர்களை பட்டியலில் வைக்கலாமா? அல்லது வெளியூர் சென்றவர்கள் ஓட்டு பட்டியலில் இருக்கலாமா? என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்கிறது.

நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்த எஸ்.ஐ.ஆர் தவறாக தெரியவில்லையா? 2000-ம் ஆண்டுக்கு பிறகு 4 முறை எஸ்.ஐ.ஆர் நடந்திருக்கிறது.

அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையா? 2000க்கு முன்பு 10 முறையும், அதற்கு பிறகு 3 முறையும் எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது. 13 முறை எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோதும் எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது.

ஒவ்வொன்றாக குறை கூறியவர்கள், இப்போது எஸ்.ஐ.ஆர் தவறு எனக்கூறுகிறார்கள். என்ன காரணத்துக்காக இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனத்தெரியவில்லை? ஆட்சியின் தவறுகளை மறைக்க, மக்களை ஏமாற்ற, மக்களவை மடைமாற்றும் முயற்சி இது.

தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்தால், ராகுல் காந்தி வாக்கு திருட்டு என்கிறார்.

பாஜக வென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறை; அவர்கள் வென்றால் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *