தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ கேட்டாங்க! – சீரியல் நடிகை மான்யா பகீர் குற்றச்சாட்டு!!

சென்னை:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

தற்போது ஜிம்முக்கு சென்று பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.


அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், “தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா… அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன்.

அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார் . ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *