சென்னை,
நடிகர் சிரஞ்சீவி தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அடிக்கடி வழங்குவார்.
அந்தவகையில், இயக்குனர் அனில் ரவிபுடியின் பிறந்தநாளில் சிரஞ்சீவி விலையுயர்ந்த வாட்சை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
சிரஞ்சீவி அனில் ரவிபுடியுடன் சேர்ந்து கேக் வெட்டி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி, பின்னர் வாட்ச்சை வழங்கினார்.
அனில் ரவிபுடி தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “மன சங்கர வர பிரசாத் கரு” படத்தை இயக்கி வருகிறார், இதில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.