சென்னை:
டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 29 முதல் 31 வரை சென்னை வண்டலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த பந்தயம் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயத்தில் இந்தியா, ஹாங்காங், ஈரான், மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டிக்கான இலச்சினை தீரன் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி அதிகாரிகள், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மணீந்தர் பால் சிங், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.