ஐ.பி.எல். 2024 -சென்னை வந்தடைந்தார் ரவீந்திர ஜடேஜா !!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

விரைவில் ஐ.பி.எல். தொடர் துவங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை வந்தடைந்தார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

பதிவில் புகைப்படத்துடன் ரவீந்திர ஜடேஜாவை குறிக்கும் வகையில் ‘ராஜா இங்கு கைப்பற்ற இருக்கிறார்,’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *