வாக்​குரிமையை தவறாமல் பயன்​படுத்தி ஜனநாயகத்தை வலுப்​படுத்த வேண்​டியது நமது பொறுப்பு – பிரதமர் மோடி..

புதுடெல்லி:
வாக்​குரிமையை தவறாமல் பயன்​படுத்தி ஜனநாயகத்தை வலுப்​படுத்த வேண்​டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்​தில் பிரதமர் மோடி வலி​யுறுத்தி உள்​ளார்.

நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு உரு​வாக்​கப்​பட்ட அரசி​யல் சாசன வரைவு, இந்​திய அரசி​யல் நிர்ணய சபை​யால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டது. இதையொட்டி ஆண்​டு​தோறும் நவம்​பர் 26-ம் தேதி அரசி​யலமைப்பு தின​மாக கொண்​டாடப்​படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்​திய அரசு அறி​வித்​தது.

இதன்​படி, அரசி​யலமைப்பு தினம் நேற்று நாடு முழு​வதும் கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்​கத்​தில், “அரசி​யலமைப்பு தினத்​தில் அரசி​யலமைப்பை வடிவ​மைத்​தவர்​களுக்கு மரி​யாதை செலுத்துவோம்.

வர்​களின் தொலைநோக்​குப் பார்​வை, வளர்ந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்ற நமது முயற்​சியை தொடர்ந்து ஊக்​குவிக்​கிறது. நமது அரசி​யலமைப்பு சட்​டம், கண்ணி​யம், சமத்​து​வம் மற்​றும் சுதந்​திரத்​துக்கு மிகுந்த முக்​கி​யத்துவம் அளிக்​கிறது.

இது நமக்கு உரிமையை வழங்​கு​வதோடு மட்​டுமல்​லாமல், குடிமக்​களாக நமது கடமை​களை​யும் நினை​வூட்​டு​கிறது. இவற்றை நிறைவேற்ற நாம் முயற்​சிக்க வேண்​டும். இந்​தக் கடமை​கள் ஒரு வலு​வான ஜனநாயகத்​துக்கு அடித்​தள​மாகும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசி​யலமைப்பு தினத்தை முன்​னிட்​டு, பிரதமர் மோடி எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

அரசி​யலமைப்​பின் சக்​தி​தான், பொருளா​தார ரீதி​யாக பின்​ தங்​கிய குடும்பத்திலிருந்து வந்த என்​னைப் போன்ற ஒரு​வர், 24 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து அரசி​யல் சாசன பதவி​யில் இருந்து பணி​யாற்ற உதவு​கிறது. நமது அரசி​யலமைப்பு நமக்கு வாக்​களிக்​கும் உரிமையை வழங்கி உள்​ளது.

எனவே, வாக்​களிக்​கும் உரிமையை தவறாமல் பயன்​படுத்​து​வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்​படுத்த வேண்​டியது நம்​முடைய பொறுப்​பு. மேலும் 18 வயது முடிவடைந்த, முதல் முறை வாக்காளர்​களை கவுரவிக்​கும் வகை​யில் பள்​ளி​கள் மற்​றும் கல்லூரி​களில் அரசி​யலமைப்பு தினத்​தில் சிறப்பு விழாக்​களை நடத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சி.பி.​ரா​தாகிருஷ்ணன் உரை: டெல்​லி​யில் உள்ள நாடாளு​மன்​றத்​தில் அரசி​யலமைப்பு தினத்தை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்​போது, “பாபா​ சாஹிப் பி.ஆர்.அம்பேத்​கர், டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத், என்​.கோ​பால சுவாமி அய்​யங்​கார், அல்​லாடி கிருஷ்ண சு​வாமி ஐயர், துர்கா பாய் தேஷ்​முக் உள்​ளிட்​டோர் அரசி​யல் சாசனத்தை உருவாக்கினர்.

இது ஒவ்​வொரு பக்​க​மும் தேசத்​தின் ஆன்​மாவை பிர​திபலிக்​கும் வகை​யில் உள்​ளது. அரசி​யலமைப்​பின் மதிப்​பு​கள் மற்​றும் கொள்​கைகளை நிலை நிறுத்​து​வதற்​கும் வலு​வான, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய மற்​றும் வளமான வளர்ந்த இந்​தி​யா​வுக்​காக கூட்டாக உழைப்​ப​தற்​கும் உறுதி அளிப்​பது​ தான் அரசி​யலமைப்​புக்கு நாம் செலுத்​தும் மிகப்​பெரிய மரி​யாதை” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *