கடந்த மூன்று நான்கு ஐந்து ஆகிய தேதிகளில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியில் நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போரேட் வட்டி விகிதம் தற்போதைய 6.5% தொடர ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
அதே போல ரெப்போ ரேட் வட்டி விகிதமும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 3.35% ஆகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024-25 ம் நிதியாண்டின் முதல் நிதி கொள்கையின் முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதி ஆண்டில் தொடர்ந்து ஆறாவது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதங்களில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 6.5% ஆக தொடர்ந்த நிலையில் தற்போது நடப்பு நிதியாண்டிலும் ரெப்போரேட் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாமல் இருப்பது வங்கிகடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
கடந்த நிதி கொள்கை அறிவிக்கப்பட்டதிலிருந்து விலைவாசியும் வளர்ச்சியும் சாதகமாகவே உள்ளதாகவும் கடந்த 9 மாதங்களாக முக்கிய விலைவாசி கணிசமாக சரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7% சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாகவும் முதல் காலாண்டில் 7.1% ஆகவும் இரண்டாம் காலாண்டில் 6.9% ஆகவும் மூன்று மற்றும் நான்காம் காலாண்டில் 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.