டிட்வா புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் பெய்த தொடர் மழை​யால் 2 லட்​சம் ஏக்​கர் நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்​கி சேதம்!!

தஞ்சாவூர்:
டிட்வா புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் பெய்த தொடர் மழை​யால் 2 லட்​சம் ஏக்​கர் நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்​கின.

டெல்டா மாவட்​டங்​களில் நவ. 28-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்​தது. இதனால் தாழ்​வான பகு​தி​களில் மழைநீர் தேங்​கியது. மேலும், குடி​யிருப்​பு​களுக்​குள்​ளும் மழைநீர் புகுந்​தது.

தஞ்சை மாவட்​டத்​தில் 15,000 ஏக்​கர், நாகை​யில் 60,000 ஏக்​கர், திரு​வாரூரில் 75,000 ஏக்​கர், மயி​லாடு​துறை​யில் 55,000 ஏக்​கர் என மொத்​தம் 2.05 லட்​சம் ஏக்​கர் பரப்​பளவி​லான சம்​பா, தாளடி பயிர்​கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்​துள்​ளன.

பல்​வேறு இடங்​களில் வடி​கால் வாய்க்​கால்​களை தூர் வாராத​தால் மழைநீர் வடிய முடி​யாமல் பயிர்​கள் அழுகும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக விவ​சா​யிகள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

புயல் காரண​மாக நாகை, தரகங்​கம்​பாடி, பூம்​பு​கார், காரைக்​கால் பகு​தி​களில் நேற்​றும் கடல் கடும் சீற்​றத்​துடன் காணப்​பட்​டது. கடலோரப் பகு​தி​களில் பலத்த காற்று வீசி​யது.

நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை மாவட்ட மீனவக் கிராமங்​களில் படகு​கள் பாது​காப்​பாக நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளன. நாகை​யில் நேற்று காலை வரை அதி​கபட்​ச​மாக 15.25 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது.

2 பேர் உயி​ரிழப்பு: மயி​லாடு​துறை மாவட்​டம் சீர்​காழி வட்​டம் செம்​ப​தனிருப்பு வடக்​குத் தெரு​வைச் சேர்ந்த ராஜா மகன் பிர​தாப்​(19) என்​பவர் இருசக்கர வாக​னத்​தில் சென்​ற​போது, அப்​பகு​தி​யில் அறுந்து தொங்​கிய மின் கம்​பி​யில் இருந்து மின்​சா​ரம் பாய்ந்து அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதே​போல, கும்​பகோணம் வட்​டம் ஆலமன்​குறிச்சி உடை​யார் தெரு​வைச் சேர்ந்​தவர் முத்​து​வேல் மகள் ரேணு​கா(20) என்​பவர் நேற்று முன்​தினம் அவரது வீட்​டின் சுவர்​ இடிந்​து விழுந்​த​தில்​ உயிரிழந்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *