புதுடெல்லி:
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த புதிய தகவல்கள் என்னவெனில் ;
டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர். மேலும் 17 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 6 சிம் கார்டுகளை உ.பி.யின் கான்பூரில் வாங்கியுள்ளனர்.
குண்டு வெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பர்வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் ஆகிய 3 மருத்துவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.
இவர்களில் பர்வேஸ் என்பவர், டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாகின் சயீதின் சகோதரர். இவர், லக்னோவில் உள்ள இன்டெக்ரல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
முகமது ஆரிப், கான்பூரில் உள்ள அரசு ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு டிஎம் (இதயவியல்) மாணவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மூன்றாவது மருத்துவரான பரூக் அகமது தார், ஜி.எஸ். மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்புக்காக அக். 2 -ம் தேதி திட்டமிடலை தொடங்கிய உமர் அக்டோபர் 28-ம் தேதி இறுதி செய்துள்ளார்.