சென்னை:
வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படம், ‘ஆல்பாஸ்’. மைதீன் இயக்கியுள்ள இப்படத்தில், துஷ்யந்த் நாயகனாகவும் ஜனனி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
லியோ, ஜெயப்பிரகாஷ், சரத் லோகிதஸ்வா, செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, ரோஷன் பஷீர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டரை நடிகர்கள் சசிகுமார், விஜய் சேதுபதி வெளியிட்டனர்.
படம் பற்றி இயக்குநர் மைதீன் கூறும்போது, “ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த படம் இது. வடசென்னை என்றாலே வெட்டு, குத்து, ரத்தம், பகை என காட்டியிருக்கிறார்கள். அது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை இப்படம் பேசும்.
பகை, வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் 3 குடும்பங்கள், வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள்.
இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன? அதில் பாஸானார்களா? என்பது திரைக்கதை” என்றார்.