கோவை,
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசித்தூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், கொண்டாம்பட்டி ஊராட்சியில் அமிர்த சரோகர் குட்டை புனரமைக்கப்பட்டுள்ளதையும், துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, கால்நடை மருத்துவமனையில் போர்வெல் பம்பு மோட்டர் அமைக்கும் பணி, அரசம்பாளையம் மயானம் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடசித்தூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் கொண்டாம்பட்டி ஊராட்சியில் அமிர்த சரோகர் குட்டை புனரமைக்கப்பட்டுள்ளதையும், கொண்டம்பட்டி ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும்பணியினையும், கால்நடை மருத்துவமனையில் போர்வெல் பம்பு மோட்டர் அமைக்கும் பணி, அரசம்பாளையம் மயானம் அருகில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பலவகையான மரக்கன்றுகள் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில், ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் அரசம்பாளையம் வடசித்தூர் முதல் சைட் நெ-.86 குரும்பபாளையம் வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலையினை தரமாகவும் விரைவாக அமைக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, நகராட்சி கமிஷனர் குமரன், கிணத்துக் கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், மோகன்பாபு, வட்டாட்சியர் குமரிஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டார்.