கோவை அருகே பொது தடத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தை காட்டு யானை சாய்த்து தள்ளியதில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

கோவை:
கோவை அருகே பொது தடத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தை காட்டு யானை சாய்த்து தள்ளியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி சரகத்துக்கு உட்பட்ட, காப்புக்காட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் காட்டுக்கு வெளியே குப்பேபாளையம் கிராமப் பகுதிக்கு அருகே பொதுத் தடத்தில் புதிதாக மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அவ்வாறு நிறுவப்பட்ட ஒரு மின் கம்பத்தை இன்று அதிகாலை ஆண் யானை சாய்த்தது‌. யானை மீது மின் கம்பிகள் பட்டதில் உயிரிழந்தது. பொது தடத்தை ஒட்டியுள்ள தோட்டத்து உரிமையாளர் அதிகாலை 5 மணி அளவில் பார்த்து தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் சம்பவத்துக்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

உயிரிழந்த யானைக்கு 25 வயது இருக்கும் என வனத்துறை தெரிவித்தனர். பிரேதப் பரிசோரனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *