23-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

கோயம்புத்தூர்
கோவை கலெக்டர் அலுவகத்திற்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 22 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று 23வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அலுவலக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் 23-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *