ஜனவரி 19-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி!!

தேனி:
சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகரஜோதி பூஜை நிறைவடைந்த நிலை​யில் வரும் 19-ம் தேதி வரை பக்​தர்​கள் தரிசனத்​துகு அனு​ம​திக்​கப்பட உள்​ளனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகரஜோதி தரிசனத்​துக்​காக கடந்த 30-ம் தேதி கோயில் நடை திறக்​கப்​பட்​டது. தின​மும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 14-ம் தேதி ஐயப்​பனுக்கு பாரம்​பரிய நகைகள் அணிவிக்​கப்​பட்டு சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது.

தொடர்ந்​து, அன்று மாலை பொன்​னம்​பலம் மேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். கோயி​லில் நாளை​யுடன் நெய்​யபிஷேகம் நிறைவு பெறுகிறது. வரும் 19-ம் தேதி இரவு குருதி பூஜை நடை​பெற உள்​ளது.

அன்று இரவு 11 மணி வரை மட்​டுமே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனு​ம​திக்​கப்​படு​வர். ஜனவரி 20-ம் தேதி காலை​யில் பந்தள ராஜ வம்​சப் பிர​தி​நி​தி​யின் பிரத்​யேக தரிசனத்​துக்கு பிறகு கோயில் நடை அடைக்​கப்பட உள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *