குண்டூர்:
ஆந்திராவில் பொங்கலை முன்னிட்டு வீடுகளுக்கு வந்த மருமகன்களுக்கு பல வகையான உணவு வகைகள் சமைத்து பரிமாறப்பட்டன.
இதில் ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த தத்தாவுக்கும், குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த மவுனிகாவுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் புது மணத் தம்பதியினர் தெனாலியில் உள்ள மவுனிகாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது மருமகன் தத்தாவுக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை அன்று இனிப்பு வகைகள், பலகாரங்கள், சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் என சுமார் 158 வகை உணவுகளை மாமியார் சமைத்து வாழை இலையில் மருமகனுக்கு விருந்து அளித்தார்.
இதனால் மருமகன் தத்தா இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.