எம்.ஜி.ஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் – தவெக தலைவர் விஜய் !!

சென்னை:
“எம்.ஜி.ஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணாவின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *