சென்னை:
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வலராறு காணாத புதிய உச்சம் தொட்டது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 என உயர்ந்தது. இதே போல வெள்ளியை விலையும் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும உயர்கிறது.
இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 16-ம் தேதி பவுனுக்கு ரூ.480 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,840 என விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ரூ.1,07, 600-க்கு விற்கப்பட்டது
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.20) கிராமுக்கு ரூ.160 என உயர்ந்து, ரூ.13,610-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,08,880-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,18,776-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.90,840-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ரூ.3,30,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.