அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’: ஜனவரி 30-ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சென்னை:
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லாக் டவுன்’. அனுபமா பரமேஸ்வரனுடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, தற்போது ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *