சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து திருமண அழைப் பிதழை வழங்கிய ராதிகா சரத்குமார்!!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.

தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.

அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 4 – வது முறையாக பதவியேற்க வுள்ளவருமான சந்திரபாபு நாயுடு அவர்களை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி வழங்கினர்.

இந்த அழைப்பிதழ் வழங்கிய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *