ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி!!

மெல்பர்ன்:
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் 3-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்​கில் 37-ம் நிலை வீர​ரான பிரான்ஸின் கோரன்​டின் மவுடெட்டை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்​னேறி​னார். கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் அல்​க​ராஸின் 100-வது வெற்​றி​யாக இது அமைந்​தது.

11-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மெத்​வ​தேவ் 6-7 (5-7), 4-6, 7-5, 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் 47-ம் நிலை வீரரான ஹங்​கேரி​யின் ஃபேபியன் மரோசனை தோற்​கடித்​தார். முதல் 2 செட்​களை இழந்த போதி​லும் அதில் இருந்து மீண்டு வந்து மெத்​வ​தேவ் வெற்றி பெற்​றது ரசிகர்களுக்கு விருந்​தாக அமைந்​தது.

19-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பால், 14-ம் நிலை வீர​ரான ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோ​விச் ஃபோகினாவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் டாமிபால் 6-1, 6-1 என்ற செட் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது காயம் காரண​மாக அலெஜான்ட்ரோ டேவிடோ​விச் ஃபோகினா வில​கி​னார்.

25-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் லர்​னர் டியன் 7-6 (11-9), 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் போர்ச்​சுகலின் நூனோ போர்​கஸை தோற்​கடித்​தார்.

13-ம் நிலை வீர​ரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்​லெவ் 3-6, 6-7 (4-7), 3-6 என்ற செட் கணக்​கில் 18-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் பிரான்​சிஸ்கோ செருண்​டோலோ​விடம் தோல்வி அடைந்தார்.

6-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் 3-6, 4-6, 5-7 என்ற செட் கணக்​கில் 29-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​சிஸ் தியாஃபோவிடம் வீழ்ந்​தார்.

3-ம் நிலை வீர​ரான ஜெர்மனியின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ் 7-5, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் 26-ம் நிலை வீர​ரான இங்​கிலாந்​தின் கேமரூன் நோரியை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் முதல் நிலை வீராங்க​னை​யும் இரு முறை சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7-4), 7-6 (9-7) என்ற செட் கணக்​கில் 55-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரி​யா​வின் அனஸ்​தேசியா பொட்​டா​போ​வாவை போராடி வீழ்த்​தி​னார்.

3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த 70-ம் நிலை வீராங்​க​னை​யான ஹெய்லி பாப்டிஸ்ட்டை தோற்​கடித்து 4-வது சுற்​றுக்கு முன்னேறினார்.

7-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி 2-6, 6-7 (3-7) என்ற செட் கணக்​கில் 18 வயதான 29-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் இவா ஜோவிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

12-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்​கில் 23-ம் நிலை வீராங்கனையான ரஷ்​யா​வின் டயானா ஷ்னைடரை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்​தார்.

19 வயதான 17-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் விக்டோரியா எம்​போகோ 7-6 (7-5), 5-7, 6-3 என்ற செட் கணக்​கில் 14-ம் நிலை வீராங்​க​னை​யான டென்​மார்க்​கின் கிளாரா டவுசனை​யும், 19-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின்​ கரோலி​னா முச்​சோ​வா 6-1, 6-1 என்​ற செட்​ கணக்​கில்​ போலந்​தின்​ மேக்​டா லின்​னெட்​டை​யும்​ வீழ்​த்​தி 4-வது சுற்​றுக்​கு முன்​னேறினர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *