ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​கான 15 பேர் கொண்ட பாகிஸ்​தான் அணி அறிவிப்பு!!

இஸ்​லா​மா​பாத்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​கான 15 பேர் கொண்ட பாகிஸ்​தான் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெறவுள்​ளது.

இந்​நிலை​யில் பாது​காப்​புப் பிரச்​சினை காரண​மாக டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் விளை​யாட இந்​தியா செல்​ல​மாட்​டோம் என்று வங்​கதேசம் அறி​வித்​தது.

இதனால் வங்​கதேசத்தை நீக்​கி​விட்டு ஸ்காட்​லாந்து அணியை போட்​டி​யில் சேர்த்து ஐசிசி (சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்) உத்​தர​விட்​டது.

இதற்​கிடையே வங்​கதேசத்​துக்கு ஆதர​வாக பாகிஸ்​தான் டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இருந்து விலக போவ​தாக எச்​சரிக்கை விடுத்து இருந்​தது.

இந்​நிலை​யில் வங்​கதேசத்​துக்கு ஆதர​வாக உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து சந்​தேகத்தை கிளப்பி அச்​சுறுத்​தல் விடுத்த பாகிஸ்​தானுக்கு ஐசிசி கடும் எச்​சரிக்​கையை அனுப்​பி​யிருந்​தது.

இவ்​வாறு செய்​தால் கிரிக்​கெட் உலகி​லிருந்து பாகிஸ்​தான் முழு​மை​யாக தனிமைப்​படுத்​தப்​படும் என்​றும் ஐசிசி எச்​சரிக்கை விடுத்​தது.

இந்​நிலை​யில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு சல்​மான் அலி ஆகா தலை​மை​யில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்​தான் நேற்று அறி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தான் அணி அனைத்து போட்​டிகளை​யும் இலங்​கை​யில் விளை​யாட​வுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. ஒரு​வேளை நாக்​-அவுட் சுற்​றுக்கு பாகிஸ்​தான் முன்​னேறி​னால் அந்​தப் போட்​டிகளும் இலங்​கை​யில்​தான் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

டி20 உலகக் கோப்​பை​யில் பாகிஸ்​தான் பிப்​ர​வரி 7-ம் தேதி நெதர்​லாந்​தை​யும், பிப்​ர​வரி 10-ம் தேதி அமெரிக்​காவை​யும், பிப்​ர​வரி 15-ம் தேதி இந்​தி​யா​வை​யும் 18-ல் நமீபியாவையும் சந்திக்க உள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்​பைக்கு முன்​ன​தாக பாகிஸ்​தான் அணி, 3 சர்​வ​தேச டி20 போட்​டிகள் கிரிக்​கெட் தொடரில் ஆஸ்​திரேலி​யாவை எதிர்த்து விளை​யாட​வுள்​ளது.

ஜனவரி 29-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்​தில் முதல் போட்​டி​யும், 31-ம் தேதி 2-வது போட்​டி​யும், பிப்​ர​வரி 1-ம் தேதி 3-வது போட்​டி​யும் நடை​பெறவுள்​ளது.

2026 டி20 உலகக் கோப்​பைக்​கான பாகிஸ்​தான் அணி விவரம்: சல்​மான் அலி ஆகா (கேப்​டன்), அப்​ரார் அகமது, பாபர் அஸம், பஹீம் அஷ்ரப், பகர் ஸமான், கவாஜா முகமது நபாய், முகமது நவாஸ், முகமது சல்​மான் மிர்​ஸா, நசீம் ஷா, சாஹிப்​சதா பர்​ஹான், சயீம் அயூப், ஷாஹீன் ஷா அப்​ரிடி, ஷதாப் கான், உஸ்​மான் கான், உஸ்​மான் தாரிக்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *