பெர்த்:
பிக் பாஷ் லீக் கிரிக்கெட் (பிபிஎல்) போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக பிபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் முன்னேறின.
இந்நிலையில் நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பிபிஎல் போட்டியில் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது.