முதலில் நாடு என்ற உணர்​வுடன் நாம் அனை​வரும் இணைந்து பணி​யாற்​றி, இந்​தி​யாவை மேலும் சிறப்​படையச் செய்ய வேண்​டும் – குடியரசுத் தலை​வர் முர்மு உரை!!

புதுடெல்லி:
நாட்​டின் 77-வது குடியரசு தின விழாவை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நாட்டு மக்​களுக்கு நேற்று ஆற்​றிய உரை​யில் கூறிய​தாவது:

உலகள​வில் நிச்​சயமற்ற தன்மை நில​வும் நிலை​யில், நமது நாட்டின் பொருளா​தா​ரம் தொடர்ந்து வளர்ச்​சி​யடைந்து வரு​கிறது. உலகின் 3-வது பெரிய பொருளா​தார நாடு என்ற இலக்கை நோக்கி இந்​தியா செல்​கிறது.

ஜிஎஸ்டி வரியை மத்​திய அரசு குறைத்​தது நாட்டின் பொருளா​தா​ரத்தை மேலும் பலப்​படுத்​தும். தொழிலா​ளர் சீர்​திருத்​தங்​கள் தொழிலா​ளர்​களுக்கு பயன் அளிக்​கும்.

தொழில் நிறு​வனங்​களின் வளர்ச்​சியை அதி​கரிக்​கும். முதலில் நாடு என்ற உணர்​வுடன் நாம் அனை​வரும் இணைந்து பணி​யாற்​றி, இந்​தி​யாவை மேலும் சிறப்​படையச் செய்ய வேண்​டும். தேசபக்தி உணர்வை வலுப்​படுத்த குடியரசு தினம் ஒரு வாய்ப்​பு.

உலக வரலாற்​றில் மிகப் பெரிய குடியரசின் அடிப்​படை ஆவண​மாக இந்​திய அரசி​யல் சாசனம் உள்​ளது. 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கு​வ​தில் இளைஞர் சக்தி முக்​கிய பங்கு வகிக்​கும்​. இவ்​வாறு திர​வுபதி முர்மு கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *